மன்னாரில் சிங்கள மீனவர்களின் மீன்பிடியால் தமிழ் மீனவர்கள் பாதிப்பு
தென்பகுதியைச்சோர்ந்த 31 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த 128 பேர் தலைமன்னார் பழைய பாலத்தடியில் கடற்படையினர் மற்றும் தலைமன்னார் பொலிஸாரின் உதவியுடன் மீன் வாடிகனை அமைத்து தொழிளில் ஈடுபட்டு வருகின்றனார்.
அப்பகுதிக்கு தமிழ் மீனவர்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிங்கள மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை கடற்படையினரின் உதவியுடன் தென்பகுதிக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.இவர்களுக்கு எவ்விதமான பாஸ் நடைமுறைகளும் இல்லை.ஆனால் அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்லும்போது பாஸ் நடைமுறையின் மூலமே கடலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.பல சோதனை நடவடிக்கைகளின் பின்னரே தெண்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படுவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.இது இவ்வாறிருக்க அன்மைக்காலமாக பெய்து வரும் அடை மழை காரணமாக தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த சுமார் 700 குடும்பங்களைச் சேர்ந்த 3800 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கி நிவாரனப்பொருட்களை வழங்குமாறு அங்கு செல்லும் அதிகாரிகளுடன் .சண்டை பிடிப்பதனாலும் எவருக்கும் எவ்விதமான உதவிகளும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது
மன்னார் செய்தியாளர்-SRL
மன்னாரில் சிங்கள மீனவர்களின் மீன்பிடியால் தமிழ் மீனவர்கள் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 24, 2010
Rating:
No comments:
Post a Comment