தென்பகுதி வியாபாரிகளினால் மன்னார் வியாபாரிகள் பாதிப்பு-(படங்கள் இணைப்பு)
பண்டிகைகளை முன்னிட்டு மன்னார் வியாபாரிகள் இம்முறை அதிகளவான பணத்தினை முதலீடு செய்து பொருட்களை கொள்வணவு செய்து அவர்களுடைய கடைகளில் வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
எனினும் அதிகளவான தென்பகுதியைச்சேர்ந்த வியாபாரிகள் சகலவிதமான பொருட்களையும் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.மன்னார் நகரசபைக்குற்பட்ட பகுதிகளில் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் இடம்பெற்று வருகின்றமையினால் நகரசபை நாளாந்த வாடகையாக கடைகளுக்கு ஏற்றவாறு பணம் அறவிடுவதாகவும் தெரிய வருகின்றது.இதேவேளை தென்பகுதி வர்த்தகர்கள் வீதியோரங்களை மீறி சில இடங்களில் வீதிகளில் கடைகளை அமைத்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதினால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் நிருபர்-SRL
தென்பகுதி வியாபாரிகளினால் மன்னார் வியாபாரிகள் பாதிப்பு-(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
December 23, 2010
Rating:
No comments:
Post a Comment