அண்மைய செய்திகள்

  
-

உள்ளுராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88ஆயிரத்து 916பேர்கள் வாக்களிக்கத் தகுதி _

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88ஆயிரத்து 916பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதாக மன்னார் தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி மன்னார் பிரதேச சபைக்கு 24ஆயிரத்து 658பேரும், முசலி பிரதேச சபைக்கு 13ஆயிரத்து 151 பேரும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 18ஆயிரந்து 707 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16ஆயிரத்து 421 பேரும், மன்னார் நகர சபைக்கு 15ஆயிரத்து 979 பேரும்; வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தேர்தல் திணைக்களம், தேர்தல் தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய கையேடுகளை ஒவ்வெரு அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் 88ஆயிரத்து 916பேர்கள் வாக்களிக்கத் தகுதி _ Reviewed by NEWMANNAR on January 25, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.