இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை _

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான வி.ஸ்.சிவகரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் மூர் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
எனினும் எவ்வித விசாரணைகளும் இன்றி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவரை மன்னரில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக இன்று முற்பகல் 11 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாக செயற்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. _
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை _
Reviewed by NEWMANNAR
on
January 26, 2011
Rating:

No comments:
Post a Comment