அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளப்பாதிப்பினால் கச்சான் கடலையை உண்டு உயிர்வாழ்கின்றோம்.

மன்னார் நானாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட செட்டியார் மகன் கட்டையடம்பன் கிராமம் வெள்ளப்பெருக்கினால் கடுமையாக பாதிக்கப்பட்ட போதும் அங்கு வந்து எந்த அதிகாரிகளும் எங்களைப்பார்க்கவில்லை என அக்கிராம மக்கள் விசனம்  தெரிவித்துள்ளனர்.



குறித்த கிராமத்தில் 83 குடும்பங்கள் உள்ளனர்.

இவர்களில் 15 குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் செட்டியர் மகன் கட்டையடம்பன் பாடசாலையில் தங்கியுள்ளனர்.

எனினும் வெள்ளப்பெருக்கின் போது அப்பகுதியில் கடமையில் இருந்த இராணுவத்தினர் அவசர உதவிகளை வழங்கினர்.

ஆனால் எங்கள் கிராமத்திற்கு பொருப்பாகவுள்ள கிராம அலுவலகர் எங்கள் பகுதிக்கு வந்து 7 நாட்களைக்கடந்து விட்டது.நாங்கள் மூன்று நேர உணவாக நாளாந்தம் கச்சான் கடலையையும் தேனீரையும் உண்டு உயிர் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அம்மக்கள் கவலை தெரிவித்தனர்.குழந்தைகளுக்காண எவ்வித பால் மா வகைகளும் இல்லை என அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.இதே வேளை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த பல இலட்சம் ரூபாய் பெருமதியான மேட்டு நில பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கினிறனர்.



கரட்,பீற்றூட்,கோவா,வெண்டி,கத்தரி உற்பட பல பயிர்ச்செய்கை பாதீக்கப்பட்டுள்ளது.குறித்த பயிர்ச்செய்கையின் மூலம் மரக்கறி வகைகள் குறித்த கிராமத்தினை அண்டிய பகுதிகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில்     பலன் அடையும் வேளையில் வெள்ள நீர் பயிர்களை அடித்துச்சென்றுள்ளது என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.





               (மன்னார் நிருபர் லெம்பேட்)

வெள்ளப்பாதிப்பினால் கச்சான் கடலையை உண்டு உயிர்வாழ்கின்றோம். Reviewed by NEWMANNAR on February 10, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.