வெள்ள அனர்த்தத்தால் நிர்க்கதியான உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் - மாணவர் ஒன்றியம் வவுனியா, யாழ் பல்கலைக்கழகம்.
யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக நிர்க்கதியாகி அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் வவுனியா மன்னார் அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட எம் உறவுகளின் அவசர கால தேவையினை கருத்திற் கொண்டு துயர் துடைப்பு பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளோம்.
இந்தப் புனிதப் பணியில் புலம் பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் எம் உடன் பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்ற உறவுகளுக்கு வவுனியா வாழ் உறவுகளின் உதவியுடன் பல லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியிருந்தோம். ஆயினும் இம்முறை அனைத்து மக்களுமே நிர்க்கதியாகி இருப்பதால் புலம் பெயர் வாழ் உறவுகளால் மாத்திரமே உதவிக்கரம் நீட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உருக்கமான வேண்டுகோளை தங்களுக்கு பகிரங்கமாக விடுக்கின்றோம்.
எனவே எமது உறவுகளின் அவசர தேவையினை கருத்திற்கொண்டு உதவி செய்ய முன்வரும் அமைப்புக்கள் மற்றும் உணர்வு உள்ளவர்கள் அனைவரும் எமது மாணவர் ஒன்றியத்தின் இலங்கை வங்கியின் வவுனியாக் கிளைக் கணக்கு இல 8162939 அல்லது ஹட்டன் நஷனல் வங்கியின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய வவுனியாக் கிளை கணக்கின் இல 032020130335 இனூடாக உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
நன்றி.
மாணவர் ஒன்றியம்
வவுனியா வளாகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இந்தப் புனிதப் பணியில் புலம் பெயர்ந்து பன்னாடுகளிலும் வாழும் எம் உடன் பிறப்புகளாகிய உங்கள் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம். மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாதிப்புற்ற உறவுகளுக்கு வவுனியா வாழ் உறவுகளின் உதவியுடன் பல லட்சம் ரூபா பெறுமதியான உலர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியிருந்தோம். ஆயினும் இம்முறை அனைத்து மக்களுமே நிர்க்கதியாகி இருப்பதால் புலம் பெயர் வாழ் உறவுகளால் மாத்திரமே உதவிக்கரம் நீட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் இந்த உருக்கமான வேண்டுகோளை தங்களுக்கு பகிரங்கமாக விடுக்கின்றோம்.
எனவே எமது உறவுகளின் அவசர தேவையினை கருத்திற்கொண்டு உதவி செய்ய முன்வரும் அமைப்புக்கள் மற்றும் உணர்வு உள்ளவர்கள் அனைவரும் எமது மாணவர் ஒன்றியத்தின் இலங்கை வங்கியின் வவுனியாக் கிளைக் கணக்கு இல 8162939 அல்லது ஹட்டன் நஷனல் வங்கியின் பிரயோக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய வவுனியாக் கிளை கணக்கின் இல 032020130335 இனூடாக உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
நன்றி.
மாணவர் ஒன்றியம்
வவுனியா வளாகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
வெள்ள அனர்த்தத்தால் நிர்க்கதியான உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டுவோம் - மாணவர் ஒன்றியம் வவுனியா, யாழ் பல்கலைக்கழகம்.
Reviewed by NEWMANNAR
on
February 09, 2011
Rating:

No comments:
Post a Comment