மன்னார் தம்பனைக்குளம் கிராமம் வெள்ள நீரில் மூழ்கியது-படங்கள் இணைப்பு
மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவக்குற்பட்ட தம்பனைக்குளம் கிராமம் இன்று(05-02-11) அதிகாலை வெள்ள நீரினால் முற்று முழுதாக மூழ்கியுள்ளது.
தென்பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக அங்கு தேங்கியிருந்த வெள்ள நீர் அறுவியாற்றின் மூலம் தம்பனைக்குளம் கிராமத்தை வந்தடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த கிராமத்தினைச்சேர்ந்த சுமார் 330 குடும்பத்தினைச் சேர்ந்த 1174 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட சின்னப்பண்டிவிருச்சான் பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்;.
குறித்த கிராமத்தில் உள்ள அணைத்து வீடுகளும் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பனியில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தம்பனைக்குளம் பிரதான வீதியில் படகுகள் மூலம் மக்களை ஏற்றி இறக்கும் சேவைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தம்பனைக்குளம் பிரதான வீதியிலும்,மடு பிரதான வீதியிலும் வெள்ள நீர் தேங்கி உள்ளது.
இதனால் மன்னார்-மதவாச்சி பிரதான வீதியுடனான வவுனியா,யாழ்ப்பாணம்,மதவாச்சி,அனுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்காண போக்குவரத்துக்கள் அணைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.சகல பகுதிகளிலும் வெள்ள நீர் காணப்படுவதினால் ஆடு,மாடு,கோழி மற்றும் நாய் போன்றவை உயிரிழந்துள்ளது.குறிப்பாக காடுகள் முழுவதும் வெள்ள நீர் காணப்படுவதினால் விசப்பாம்புகள் நீரில் மிதந்து கொண்டு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் நேரில் சென்றுபார்வையிட்டார்.இதன் போது டெலோ இயக்கத்தின் மன்னார் மாவட்ட பொருப்பாளர் செட்டி வினோ சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர் லெம்பேட்)

Reviewed by NEWMANNAR
on
February 06, 2011
Rating:
No comments:
Post a Comment