நாட்டின் சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு.!

இவர்கள் 430 தற்காலிக முகாம்களில் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இயற்கை அனர்த்தங்களால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 8 அதிகரித்துள்ளதாக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதேவேளை, 5 பேர் காயமடைந்துள்ள நிலையில், 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
எனினும், இன்று முற்பகல் நாட்டின் பல பாகங்களில் சீரான காலநிலை நிலவும் அதேவேளை, பிற்பகலில் கிழக்கு, வடமத்திய, வடக்கு, மற்றும் ஊவா மாகாணங்களில் மழைபெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேபோன்று எதிர்வரும் இரு தினங்களுக்கும் அதிக மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியும் என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.ஆர்.ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கிழக்கு கடற்பிராந்தியம் கொந்தளிப்பான நிலையில் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தநிலையில், மன்னார் மாவட்ட அனர்த்த நிலை தொடர்பான தகவல் . மன்னார் மடு வீதியில் உள்ள தம்பனைக்குளம் கிராமத்தில் 4 அடிக்கு அதிகமான உயரத்திற்கு வெள்ளம் தேங்கியிருப்பதாக வெளிமாவட்டத்திற்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மன்னார் சவேரியார் ஆண்கள், மற்றும் பெண்கள் கல்லூரிகள் இடம்பெயர்ந்தவர்களை தங்கவைக்கப்பதற்காக தயார்படுத்தப்பட்டுள்ள வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.ரெவல் தெரிவித்துள்ளார். அதேவேளை, திருக்கோவில் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குமிட வசதியின்றி தொழிற்பயிற்சி நிலையத்திற்கு முன்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாண்டிருப்பு பிரதேசத்தில் வெள்ளநீர் அதிகவாக கடலுக்கு செல்வதனால் விஷ்னு ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள மையவாடியில் இருந்து புதைக்கப்பட்ட சடலங்கள் வெளிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சுகாதார அச்சுறுத்தல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். நேற்று கல்முனையிலிருந்த கிட்டங்கி பாலத்தின் ஊடாக அன்னமலை பிரதேசத்திற்கு படகில் சென்ற இருவர் படகு கவிழந்ததில் பலியாகினர்.
தம்பலகாமம் பிரதேசத்தில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக புதுக்குடியிருப்பு முகாமில் மக்கள் செறிந்துள்ளதால் ஏற்பட்ட நெருக்கடியில் நோய்வாய்ப் புற்றிருந்த வயோதிபர் ஒருவர் நேற்று மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டின் சீரற்ற காலநிலையால் உயிரிழப்புக்கள் அதிகரிப்பு.!
Reviewed by NEWMANNAR
on
February 06, 2011
Rating:

No comments:
Post a Comment