கூட்டமைப்பு ஐ.தே.கவையே பின் தள்ளி தேர்தலில் வெற்றி பெற்றுச் சாதனை:அரசுக்கு 205; ஐ.தே.கவுக்கு 09; ஜே.வி.பி. படுதோல்வி
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 234 உள்ளூராட்சிச் சபைகளில் 205 சபைகளைக் கைப்பற்றி வெற்றிவாகை சூடியுள்ளது. மேலும் எட்டு சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளே கைப்பற்றியுள்ளன.உள்ளூராட்சிச் சபைத் தேர்தல்களில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 உள்ளூராட்சிச் சபைகளைக் கைப்பற்றியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி 9 சபைகளை மாத்திரமே வென்றுள்ளது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திஸ்ஸமஹராம பிரதேச சபையையும் ஜே.வி.பி இம்முறை இழந்துள்ளது. இப்பிரதேச சபையில் 23 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று மூன்றாவது இடத்தை ஜே.வி.பி. பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.ம.சு.முன்னணி அரசுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு பிரதேச சபைகளையும், தேசியகாங்கிரஸ் இரண்டு சபைகளையும், மலையக மக்கள் முன்னணி ஒரு பிரதேச சபையையும் கைப்பற்றியுள்ளன. இதேவேளை, மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேசசபைத் தேர்தலில் ஐ.ம.சு. முன்னணியின் ஆதரவு பெற்ற சுயேச்சைக் குழு வெற்றி பெற்றுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்றுமில்லாதவாறு ஏறாவூர் நகரசபை, காத்தான்குடி நகரசபை, கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபை, சம்மாந்துறை பிரதேச சபை ஆகியவற்றையும் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை, தமிழர் தாயகப் பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 20 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் இதேபோன்று வெற்றிவாகை சூடுவோம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஜே.வி.பி. இத்தேர்தலில் ஒரு சபையைக் கூட கைப்பற்றவில்லை.

ஐ.தே.கட்சி இந்தத் தேர்தலில் பேலியகொட நகரசபை, வத்தளை மாபொல நகர சபை, பியகம பிரதேச சபை, மீரிகம பிரதேச சபைகளை இழந்துள்ளது. இவற்றை ஐ.ம.சு.முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
16 சபைகளில் 12 கூட்டமைப்பிடம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, 16 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிட்டு 12 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியுள்ளது.நடைபெற்று வரும் அரசு கூட்டமைப்புக்கிடையிலான பேச்சுகளுக்கு வலுச்சேர்ப்பதற்கு, தமிழ் மக்கள் எமக்கு வாக்களித்து எமது கரங்களைப் பலப்படுத்தவேண்டும் என்று பிரசார நடவடிக்கைகளின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, தமிழ் மக்கள் தமது வாக்குகளைக் கூட்டமைப்புக்கு வழங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமது தனிப்பெரும் கட்சி என்பதை அரசுக்கு எடுத்துக்காட்டியுள்ளனர் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தமிழர் தாயகப் பிரதேசங்களான கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களில் ஒத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 20 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் இதேபோன்று வெற்றிவாகை சூடுவோம் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
கூட்டமைப்பு ஐ.தே.கவையே பின் தள்ளி தேர்தலில் வெற்றி பெற்றுச் சாதனை:அரசுக்கு 205; ஐ.தே.கவுக்கு 09; ஜே.வி.பி. படுதோல்வி
Reviewed by NEWMANNAR
on
March 19, 2011
Rating:

No comments:
Post a Comment