போரினால் பாதீக்கப்பட்ட மடு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு லண்டன் 'லடர் யு.கே'அமைப்பு உதவி

இதன் ஒரு கட்டமாக நேற்று புதன் கிழமை கிழமை(01-03-11)மன்னார் மடுக்கல்வி வலயத்திலுள்ள இரனை இலுப்பைக்குளம் அ.த.க.பாடசாலை,மற்றும் விளாத்திக்குளம்,முள்ளிக்குளம்,வலயன்கட்டு,பாலம்பிட்டி அ.த.க.ஆகிய பாடசாலைகளைச்சேர்ந்த 500 மாணவர்களுக்குபாடசாலைச்சீருடைப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.இப்பொதிகள் வழங்கும் நிகழ்வு இரணை இலுப்பைக்குளம் அ.த.க.பாடசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் இராசநயகத்தின் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உருப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,லண்டன் லடர் யு.கே.அமைப்பின் பனிப்பாளர் மரியதாஸ்,பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
லடர் யு.கே.அமைப்பானது போரினால் வெகுவாக பாதீக்கப்பட்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பினைச்செய்து வரும் நிறுவனமாகும்.அந்த வகையில் கல்வியில் மிகவும் பின்தங்கிய பாடசாலையிலர் பயிலும் வறிய மாணவர்களுக்கு உதவும் பொருட்கள் மன்னார் மாவட்டத்தில் மடுக்கல்வி வலயப்பாடசாலைகள் இனம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
போரினால் பாதீக்கப்பட்ட மடு கல்வி வலய பாடசாலை மாணவர்களுக்கு லண்டன் 'லடர் யு.கே'அமைப்பு உதவி
Reviewed by NEWMANNAR
on
March 03, 2011
Rating:

No comments:
Post a Comment