தலைமன்னார் மணல்திட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது சிறிலங்கா கடற்படை
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் உள்ள இரண்டாவது மணல்திட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் படகுச்சேவையை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தப் படகுச்சேவையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் சிறிலங்கா கடற்படையின் வடமத்திய பிராந்திய தளபதி றியர் அட்மிரல் றொகான் அமரசிங்க, மன்னார் அரசஅதிபர் வேதநாயகன், மற்றும் சிறிலங்கா கடற்படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தலைமன்னார் பழைய இறங்குதுறையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு புறப்படும் படகுகள் இரண்டாவது மணல்திட்டை சுமார் இரண்டு மணி நேரங்களில் சென்றடையும்.
இந்தப் பயணத்துக்கு உள்ளூர் சுற்றுலாப் பயணிகளிடம் தலா 500 ரூபாவும், வெளிநாட்டு சற்றுலாப் பயணிகளிடம் தலா 1000 ரூபாவும் அறிவிடப்படுகிறது. இந்தப் பயணத்தின் போது சுற்றுலாப் பயணிகளுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்படுகின்றன.
தலா ஆறு பேரை ஏற்றிச் செல்லக் கூடிய நான்கு படகுகளை சிறிலங்கா கடற்படை இந்தச் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இரண்டாவது மணல் திட்டில் சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த கடலின் அழகை ரசிப்பதற்கான மரத்தால் ஆன கட்டடம் ஒன்றும் சிறிலங்கா கடற்படையினரால் அமைக்கப்பட்டுள்ளது.
தலைமன்னார் மணல்திட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது சிறிலங்கா கடற்படை
Reviewed by NEWMANNAR
on
April 13, 2011
Rating:

No comments:
Post a Comment