அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் கடல் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றம் உடன் தடுத்து நிறுத்தவும்- செல்வம் எம்.பி கோரிக்கை-


மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்டவகையில் பெரும்பான்மையின மக்களை குடியேற்றும் அரசின் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்பட வேண்டும்.இல்லையேல் இது பாதகமான விளைவுகளையே எதிர்காலத்தில் உருவாக்கும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
 
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிக்கப்பட்டுள்ளதாவது.

  மன்னார் மாவட்டத்தின் தென் எல்லையோரமாகவுள்ள சில பகுதிகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட பெரும்பான்மையின குடியேற்றத்திற்கு உற்படுத்தவுள்தாக அறியமுடிகின்றது.
 
 
இப்பகுதிகளை உள்ளடக்கிய முள்ளிக்குளம்இகிராமம் கொண்டச்சியிலுள்ள தம்பப்பள்ளி மற்றும் மடு வீதியிலுள்ள பல பகுதிகள் அபகரிக்கப்பட்டு வரவதாக தகவல் மூலம் அறிய வருகின்றது.
 
 
முள்ளிக்களம் பிரதேசம் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீள் குடியேற்றம் இது வரை மறுக்கப்பட்டு இதன் கரையோரப்பிரதேசங்கள் கடற்படைத்தளமாக மாற்றப்பட்டுள்ளது. கொண்டச்சி பிரதேசம் மன்னார் மாவட்டத்தில் முந்திரிகைச்செய்கைக்கு பெயர் பெற்றது.
 
 
யுத்தகால நடவடிக்கையின் காரணமாக முந்திரிகைச்செய்கை மிக மோசமாக பாதிக்கப்பட்டதுடன் முற்றாக அழிக்கப்பட்டது என்றே கூற முடியும். தற்போது அப்பகுதியில் புனரமைப்பு என்ற போர்வையில் பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் முயற்சிகள் அரச தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியவருகின்றது.
 
 
இவ்வாறுதான் மடுவீதி மற்றம் மடுப் பிரதேசப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் விஸ்தரிப்புஇ பெரும்பான்மைக் குடியீருப்புக்கள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இவ்வறே கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் தமிழர் தாயகப் பிரதேசங்களை அபகரிக்கும் முயற்சிகள் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்றது.
 
 
தமிழ் மக்களின் மிகப்பபெரும் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ் குட நாட்டில் அதிகாரத்திலுள்ளவர்களின் துனையுடன் பெரும்பான்மையினக் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
 
ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள்இ பிரதியமைச்சர்கள் ஆகியோரால் கூட இதனை தட்டிக்கேட்க முடியாத நிலைமையே இதாடர்ந்து காணப்படுகின்றது.
 
 
அதே நேரம் அம்பாரை மாவட்டத்தின் முஸ்ஸிம் மக்களுக்கு சொந்தமான பெருமலவான நிலப்பரப்புக்கள் பெரும்பான்மை இனத்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது.
 
 
இதனைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலேயே ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்ஸிம் அரசியல் வாதிகள் உள்ளனர் என்பதனையும் சுட்டிக்காட்ட வேண்டும்.இல்லையேல் மக்கள் போராட்டத்தினூடாக கிள்ர்ந்தெழுவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
 
மன்னாரின் கடல் எல்லையோரப் பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பெரும்பான்மை இன மக்கள் குடியேற்றம் உடன் தடுத்து நிறுத்தவும்- செல்வம் எம்.பி கோரிக்கை- Reviewed by NEWMANNAR on April 12, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.