அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வரர் ஆலயப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம்


வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் எட்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து திருத்தேர்கள் திருவீதியுலா வரும் காட்சியைக் காணக்கூடிய அந்தப் புனிதத்தலத்தின் திருவிழாக்காலத்தில் பகல், இரவுத் திருவிழாக்கள் இடம்பெறும்.எதிர்வரும் ஒன்பதாம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பமாகும் திரு முழுக்கு, அபிஷேகம், கொடித்தம்பப் பூசை, வசந்த மண்டப அலங்காரப் பூசைகள் என்பன முற்பகல் 10 மணிவரை இடம் பெறும்.
 
அதனைத் தொடர்ந்து எதிர் வரும் 16 ஆம் திகதி திங்கட் கிழமை தேர்த்திருவிழாவும் மறு நாள் செவ்வாய்க்கிழமை தீர்த் தத் திருவிழாவும் எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை மௌ னத் திருவிழாவும் மறுநாள் வியாழக்கிழமை சண்டிகேஸ்வரன் திருவிழாவும் நடைபெறவுள்ளன.திருவிழாக் காலத்தில் பக்தர்கள் யாழ் சங்குப்பிட்டி மன்னார் ஊடாகப் பேருந்துச் சேவைகளைப் பயன்படுத்தலாம். பக்தர்களின் நலன்கருதி சிவராத்திரிமடம், சிவபூமி அன்னதான மடம் ஆகிய வற்றில் இருவேளை உணவு கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பாடசாலை மாணவர்களின் பண்ணிசை நிகழ்வுகளும் இடம்பெறுமென ஆலய திருப்பணிச் சபையினர் அறிவித்துள்ளனர். 
திருக்கேதீஸ்வரர் ஆலயப் பெருந்திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பம் Reviewed by NEWMANNAR on May 07, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.