மன்னார் மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி _
மன்னார் மற்றும் மடு கல்வி வலய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவினர் இலவச பாடசாலை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வு இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் விக்கும் லியனகே தலைமையில் இடம் பெற்றது.
மேற்படி நிகழ்வில் மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தைச் சேர்ந்த 57 பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதோடு தெரிவு செய்யப்பட்ட 110 மாணவ மாணவிகளுக்கு பாதணிகளும் வழங்கப்பட்டன. _
மன்னார் மாணவர்களுக்கு இராணுவத்தினர் உதவி _
Reviewed by NEWMANNAR
on
May 07, 2011
Rating:

No comments:
Post a Comment