அடிப்படை வசதியற்ற நிலையில் மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள்
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்கள் 20 வருடங்களுக்குப்பின்னர் கடந்த வருடம் நவம்பர் மாதம் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு சுமார் 6 மாதங்களைக்கடந்து செல்கின்ற போதும் குறித்த கிராம மக்கள் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி வாழ்ந்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கிராம மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் மன்னாரில் உள்ள அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
பின் இவர்கள் கடந்த வருடம் நவம்பர் மாதம் மீள்குடியமர்த்தப்பட்டனர் பின் தற்காலிக வீட்டுக்கான பொருட்கள் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்தது.
அதன் பின்னர் உதவி வழங்கும் செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போதும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் தற்போது சுமார் 45 குடும்பங்கள் மட்டுமே உள்ளன.
எனவே தாம் தொடர்ந்தும் பல அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் தமது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப உரிய அதிகாரிகள் கவனம் செலுத்துமாறும் அம்மக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Reviewed by NEWMANNAR
on
May 15, 2011
Rating:

No comments:
Post a Comment