யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களுக்கு சுயதொழிலில் ஈடுபட உதவிகள் தேவை-செல்வம் எம்.பி

குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,,
வன்னியில் இடம் பெற்ற மேதலின் போது அதிகளவான பெண்கள் தமது கணவனை பலி கொடுத்துள்ளனர்.குறித்த பெண்களுக்கு உரிய முறையில் எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை.தமது குடும்பத்தினை வழிநடத்திச்செல்லுவதற்கு பாரிய பொருளாதார சிக்கலில் உள்ளனர்.
இவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்து சுய தொழில் முயற்சியில் ஈடுபட விரும்புகின்றனர்.குறிப்பாக இவர்களுக்கு ஆடு,மாடு,கோழி போன்றவற்றினை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இவர்கள் தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள முடியும்.
எனவே வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்ட பெண்களுக்கு சுய தொழில் முயற்சியில் ஈடுபட உதவிகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என கோரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கால்நடை அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகம் தொன்டமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் நிருபர்
யுத்தத்தினால் கணவனை இழந்த பெண்களுக்கு சுயதொழிலில் ஈடுபட உதவிகள் தேவை-செல்வம் எம்.பி
Reviewed by NEWMANNAR
on
June 15, 2011
Rating:

No comments:
Post a Comment