அண்மைய செய்திகள்

recent
-

மீள்குடியேற்றப்பட்டும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் பரப்புக்கடந்தான் கிராம மக்கள்!


மன்னார் மவாட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட பரப்புக்கடந்தான் கிராம மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக மாந்தை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.ரமனண் தெரிவித்தார்.

யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வந்த நிலையில், அரசிற்கு சர்வதேச நாடுகளினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தத்தினைத் தொடர்ந்து நலன்புரி நிலையத்தில் உள்ளவர்கள் மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குறித்த கிராமத்தில் 200 குடும்பங்கள் உள்ளனர்.


மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களைக்கடந்தும் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என தெரிவிக்கின்றனர். குடி நீர், மின்சாரம்போக்குவரத்து என்பன அவசியமாக காணப்படுகின்ற போதும் குறித்த வசதிகள் எதுவும் பரப்புக்கடந்தான் கிராமத்தில் இல்லை என குறித்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.



இடம் பெயர்ந்து செல்லும் போது முழு நிரந்தர வீடுகளாக காணப்பட்டவை தற்போது தரைமட்டமாக உடைக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அப்பகுதிக்கான பஸ் சேவை மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது. மற்றும் அவசர மருத்துவ வசதிகளை பெற உள்ளவர்கள் என பல தரப்பட்டவர்களும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.




தரைமட்டமான வீடுகளை சிறிதளவு நிர்மாணித்து அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மீள்குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயரங்களுக்கு உதவி செய்யுமாறு மாந்தை மேற்கு பிரதேசசபை உறுப்பினர் எஸ்.ரமனண் கோரிக்கை விடுத்துள்ளார்.



மீள்குடியேற்றப்பட்டும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் பரப்புக்கடந்தான் கிராம மக்கள்! Reviewed by NEWMANNAR on July 27, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.