அண்மைய செய்திகள்

recent
-

கனிஷ்ட தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் மாணவன்


மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் சத்திய சீலன் சஜீவன் என்ற மாணவன் அகில இலங்கையில் 17 வயதுக்குட்பட்ட கால்பந்தாட்ட வீரர்களில் மிகச் சிறந்த வீராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு நேபாளத்தில் நடைபெறவுள்ள கனிஷ்ட தெற்காசிய அணிகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கலந்து கொள்வதற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 


குறித்த இளைஞனின் பயணத்திற்கு உதவித்தொகையாக மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட பயிற்சிவிப்பாளர்  ஜஸ்வினின் முயற்சியில் மன்னார் விவசாய திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.சிவலிங்கம் 30 ஆயிரம் ரூபாவினை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் ஊடாக குறித்த வீரரின் தாயாரான மேரி மரிஸ்ரலாவிடம் வழங்கினார்.

இதேவேளை மன்னார் மாவட்ட கால்பந்தாட்ட உதவிச் செயலாளரும் பொலிஸ் அதிகாரியுமான கே.காந்தன் இலங்கை கால்பந்தாட்டத்தின் செயலாளரும் மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் செயலாளருமான அன்றனிடமிருந்து இருந்து 7 ஆயிரம் ரூபாவினை குறித்த மாணவனுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
கனிஷ்ட தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் மன்னார் மாணவன் Reviewed by NEWMANNAR on July 30, 2011 Rating: 5

1 comment:

Anonymous said...

Sajeevaniku enathu vaalthukkal.avarukku nithi uthavi seitha nalla ullangalukkum enathu vaalthukkal.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.