தொடரும் பாஸ் நடைமுறையால் அவதியுறும் மன்னார் மீனவர்கள்!
மீனவர்கள் குறித்த சோதனைச்சாவடிக்கு சென்று கடற்படையினரிடம் தேசிய அடையாள அட்டை மற்றும் ஏணைய ஆவனங்களை சமர்ப்பித்தால் கடலுக்குள் செல்லுவதற்கான பாஸ் ஒன்றை வழங்குகின்றனர். அதனைக்கொண்டே கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டும். கடற்படையினர் சில நேரங்களில் கடலில் மீனவர்களிடம் சோதனைகளை மேற்கொள்ளும் போது பாஸ் இல்லாது விட்டால் கடுமையாகத் தாக்குவதாகவும், அச்சுறுத்துவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாஸ் நடைமுறையினால் உரிய நேரத்திற்கு தொழிலுக்குச் சென்று கரை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடற்தொழிலுக்கான இந்த பாஸை பெற்றுக்கொள்ளுவதற்கு மீனவர்கள் ஒவ்வொருவரும் நீண்ட நாட்கள் பாதுகாப்புத்தரப்பினரை தேடி அழைந்து திரிவாதாக தெரிவிக்கின்றனர். விண்ணப்பப்படிவம் ஒன்றில் சுமார் 10 இற்கும் மேற்பட்ட அதிகாரிகளிடம் கையொப்பத்தினை பெற்ற பின்னரே புதிய பாஸ் வழங்கப்படுகின்றது.
ஆனால் தற்போது பல இடங்களில் தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கு கடற்படையினரிடம் இருந்து புதிய பாஸ் இன்னும் வரவில்லை என்றும் இதனால் பல மாதக்கணக்காக தொழிலுக்குச்செல்ல முடியாத நிலையில் இருப்பதாகவும் இதனால் எமது குடும்பம் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் நிலைக்கு தள்ளப்பட்டள்ளதாகவும் மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடரும் பாஸ் நடைமுறையால் அவதியுறும் மன்னார் மீனவர்கள்!
Reviewed by NEWMANNAR
on
August 01, 2011
Rating:
No comments:
Post a Comment