மன்னார் கடற்படை முகாமிற்குள் தப்பியோடிய 4 மர்மமனிதர்கள்!
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் நேற்றிரவு 4 பேர் கொண்ட மர்மநபர் குழுவை பொதுமக்கள் துரத்திச் சென்றபோது குறித்த மர்மநபர்கள் அருகில் உள்ள கடற்படை முகாமிற்குள் தப்பிச் சென்றுள்ளதால் பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வீடொன்றை குறித்த மர்ம நபர்கள் தட்டியதைத் தொடர்ந்து இவர்களை பிடிப்பதற்காக மக்கள் துரத்திச் சென்றபோது கடற்படை முகாமிற்குள் நுழைந்துள்ளனர். இதனால் படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான மோதலில் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்றபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
“சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் வீடு ஒன்றிற்கு சென்ற மர்மநபர்கள் 4 பேர் குறித்த வீட்டின் கதவை தட்டியுள்ளனர். அப்போது குறித்த வீட்டில் உள்ள ஒருவர் கதவைத்திறக்க கதவிற்கு முன் வித்தியாசமான 4 பேர் நிற்பதை கண்டு சத்தம்போட்டுள்ளார்.
இதன் போது குறித்த மர்ம நபர்கள் 4 பேரும் ஓடி அருகில் உள்ள கடற்படை முகாமிற்குள் தப்பிவிட்டனர்.
சம்பவம் இடம் பெற்ற வீட்டிற்கும் கடற்படை முகாமுக்கும் உள்ள தூரம் சுமார் 250 மீற்றர் மட்டுமே.
மர்ம நபர்கள் கடற்படை முகாமுக்குள் தப்பிச்செல்லுவதை அவதானித்த துரத்திச்சென்ற இளைஞர்கள் அதனை ஊர் பெரியார்களிடம் கூறினர்.
பின் பள்ளிவாசலில் ஒலிபெரூக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதினைத்தொடர்ந்து கிராமமக்கள் அனைவரும் கடற்படை முகாமை சூழ்ந்து கொண்டு முகாமுக்குள் செல்ல எத்தனித்துள்ளனர்.
எனினும் கடற்படையினர் உள்ளே விடவில்லை. மீறி உள்ளே செல்பவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என கூறினர்” என்றார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸாரும், படையினரும் குவிக்கப்பட்டுள்ளதுடன், கிராம மக்கள் குறித்த மர்மநபர்களை தம்மால் அடையாளம்காட்ட முடியும் என்றும் தம்மை உள்ளேவிடும்படியும் கோரியுள்ளனர். ஆனால் மேலிடத்தில் இருந்து உத்தரவு வராமல் உள்ளே விட முடியாது என கடற்படையினர் தெரிவித்தனர்.
தற்போது எருக்கலம்பிட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Reviewed by NEWMANNAR
on
August 21, 2011
Rating:

No comments:
Post a Comment