மர்ம மனிதனால் பேசாலையில் பதற்றம்;
மன்னார் பேசாலை பகுதியில் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் துரத்திச் சென்ற போது அவர்கள் பேசாலை கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருக்கும் கடற்படை முகாமுக்குள் நுழைந்து ஒழிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் குறித்த கடற்படை முகாமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. அங்கு பொதுமக்களும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கைகலப்புகாரணமாக சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றிரவு 8.30 மணியளவில் பேசாலை கடற்கரைப் பகுதியில் இருக்கும் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனிதர்களை பொதுமக்கள் பிடிப்பதற்காக துரத்திச் சென்றனர். அப்போது அங்கிருக்கும் கடற்படை முகாமுக்குள் மர்ம நபர்கள் சென்று ஒளிந்து கொண்டதாக மக்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து மர்ம நபர்களை ஒப்படைக்குமாறு கோரி பிரதேசவாசிகள் முற்றுகைப் போராட்டத்தை மேற்கொண்டனர். பொதுமக்களை கலைந்து செல்லுமாறு பாதுகாப்புத் தரப்பினர் கோரிய போதும் அதற்கு மக்கள் இணக்கம் தெரிவிக்காததால் வானத்தை நோக்கி படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதனையடுத்து மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தினார்.
ஆலயமணி ஒலி
இதன்காரணமாக அப்பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. இச்சம்பவத்தில் சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். சிறிது நேரத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக் கொண்டு வரப்பட்டதும், ஆலய மணிகளில் ஒலி எழுப்பப்பட்டு பிரதேச மக்கள் அனைவரும் புனித வெற்றிமாதா ஆலய முன்றலுக்கு அழைக்கப்பட்டனர்.
சம்பவத்தை அடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை பாதுகாப்புத் தரப்பினருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் வெற்றிமாதா ஆலய முன்றலில் கூடியிருந்த மக்கள் மத்தியில் ஆயர் உரையாற்றுகையில்,
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்களாகிய நீங்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. எனக்கு அறிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நான் ஆவன செய்வேன் என்றார். இக்கூட்டம் நேற்று நள்ளிரவு வரை இடம்பெற்றது. ___

Reviewed by NEWMANNAR
on
August 23, 2011
Rating:

No comments:
Post a Comment