முருங்கன் வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள்

மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இரண்டு பிரதேசங்களை இணைக்கும் பிரதான பிரதேசத்தில் உள்ள மருத்துவ மனையாக முருங்கன் வைத்திய சாலை திகழ்கின்றது.
மன்னார் பாலத்தில் இருந்து செட்டிகுளம் வரையான பிரதேசத்தை உள்ளடக்கியதாக இம் மருத்துவ மனையின் சேவைகள் இடம் பெறுகின்றன. இப் பாதையில் அடிக்கடி வீதி விபத்துக்கள் நிகழ்கின்றன.மன்னார் மாவட்ட பெரு நிலப்பரப்பு விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ளதால் விவசாயிகள் இம் மருத்துவ மனையை பெரிதும் நம்பி இருக்கின்றனர்
பயிர்களுக்கான கிருமி நாசினிகளை தெளிக்கும் போது அதனை சுவாசிப்பதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.கடந்த காலத்தில் ஏற்பட்ட யுத்தத்தின் விளைவாக ஏற்பட்ட இடம் பெயர்வுகள், உயிர் இழப்புகள்,உடமை இழப்புகள் ஆகியவற்றினால்மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கும் இப் பகுதி மக்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதும் அதிகரித்துள்ளது. அத்துடன் மாடு தேவாலயம் மற்றும் திருக்கீதிஸ்வரம் ஆகிய புண்ணியஷ்தலங்களுக்கு வரும் யாத்திரிகளும் தங்களுக்கு ஏற்படும் உபாதைகளுக்கும் அவசர சிகச்சை பெறுவதற்கும் இந்த மருத்துவ மனையை நம்பி இருக்கின்றனர்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ மனை சகல கட்டுமானங்களையும் கொண்டிருத்தல் வேண்டும்.அனால் இந்த வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை நிகழ்கின்றது.இதுமட்டுமன்றி வேறு குறைபாடுகளும் நிகழ்கின்றது.
முக்கியமாக இந்து வைத்தியர் கடமையாற்ற வேண்டிய இம் மருத்துவ மனையில் ஒரே ஒரு வைத்தியர் மாத்திரம் இரவு பகலாக கடமை புரிகின்றார் .இவருக்கு சுகவீனம் மருத்துவமனையே ஸ்தம்பித்துவிடும் ஆபத்து நிலவுகின்றது. எனவே குறைந்த பட்சம் ஒரு மருத்துவராவது உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்.
அடிக்கடி ஏற்படுகின்ற மின் வெட்டால் சிகிச்சை பெருமளவில் பாதிக்கப்படுகின்றது.அத்துடன் உட்புற நோயாளிகள் பெரிதும் அல்லலுறுகின்றனர். இதனை போக்குவதற்காக புதிய மின் பிறப்பாக்கி வழங்கப்படல் வேண்டும்.
16 தாதி மார்களுக்கான ஆளணி காணப்படுகின்றபோதிலும் நிரந்தர தாதியரும் இந்து பயிற்சி தாதியரும் மட்டுமே காணப்படுகின்றனர்.மருத்துவ மனையின் முக்கியத்துவம் கருதி தாதியர் நியமனம் செய்யப்பட வேண்டும்.தாதியருக்கான தங்குமிடவசதி செய்து கொடுக்கப்படவில்லை.அவர்களுக்கு விடுதி முக்கியமானதாகும்.
சுகாதார சிற்றூளியர்களுக்கான ஆளணி அதிகரிக்கப்பட்டு நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி உள்ளது.அத்துடன் கால் நடைகள் உள்ளே பிரவேசிப்பதால் பல இடர் பாடுகளை எதிர் நோக்க வேண்டி உள்ளது.எனவே சுற்று மதில் அமைக்கப்படல் வேண்டும் .இத்தகைய குறைபாடுகள் களையப்பட்டு முருங்கன் பிரதேசமருத்துவமனை தன்னிறைவுடனும் முழு சக்தியுடனும் நிறைவானமருத்துவ வசதிகளை செய்வதற்கு வட மாகான சுகாதார திணைகளம் முன் வரவேண்டும்.
இது தொடர்பாக வட மாகாண ஆளுநருக்கும் தெரிவித்திருப்பதாக அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முருங்கன் வைத்தியசாலையில் பல்வேறு குறைபாடுகள்
Reviewed by NEWMANNAR
on
September 07, 2011
Rating:

No comments:
Post a Comment