அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நகரின் பிரதான வீதிகளில் மின் விளக்குகள் இன்னும் மாற்றப்படவில்லை


 மன்னார் நகரின் பிரதான வீதிகிளில் காணப்படும் மின் விளக்குகளில் அதிகமானவை நீண்ட காலமாக ஒளிராமல் காணப்படுகின்றன .

இதன் காரணமாக நகரின் பல முக்கிய பகுதிகள் இரவு நேரங்களில் இருள் மயமாக காட்சியளிக்கின்றன இதனால் இப்பகுதிகளில் உள்ள வீதிகளில் மக்கள்இரவு வேளைகளில் பயணம் செய்வதில் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

இது தொடர்பாக மன்னார் மின்சாரசபையின் அதிகாரிகளுடன் தான்  கலந்துரையாடி உள்ளதாகவும் , உரிய நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என மன்னார் நகரசபையின் உப தலைவர் திரு .ஜேம்ஸ் அவர்கள் செய்தித்தாளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். 

ஆயினும் மின்சரசபையினரால் இதுவரை எது வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. 



ஆகவே இது தொடர்பாக நகரசபையின் உப தலைவரின் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம் 


எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து மக்களின் சிரமங்களை தீர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

-Roshiban ரவி
மன்னார் நகரின் பிரதான வீதிகளில் மின் விளக்குகள் இன்னும் மாற்றப்படவில்லை Reviewed by NEWMANNAR on September 06, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.