இடம் பெயர்ந்து சென்ற போது எனது கணவரை இராணுத்தினரே பிடித்துள்ளனர்! கணவனை தொலைத்த மனைவியின் பரிதவிப்பு
மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச்செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் இடம் பெற்ற யுத்தத்தின் போது அப்பகுதி மக்கள் திடீர் என இடம் பெயர்ந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் போது குறித்த கிராம மக்களை முதலில் நாணாட்டான் பிரதேசச்செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் இராணுவத்தினர் முதலில் தங்கவைத்தனர்.
இந்த இடப்பெயர்வின் போது சிலர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. எனினும் முள்ளிக்குளம் கிராமத்தில் இடம் பெற்ற இடப்பெயர்வின் போது கடந்த 2007 ஆம் ஆண்டு 09 ஆம் மாதம் 07 ஆம் திகதி தனது கணவரான சோதிராஜன் (தற்போது வயது-42) என்பவர் இராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட போது காணாமல் போயுள்ளதாக அவருடைய மனைவி இமல்டா தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்......
முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து தாம் இடம் பெயர்ந்து சென்று இம்மாதம் 07 ஆம் திகதியுடன்(07-09-2011) 4 வருடங்கள் முடிகின்றது. இது வரை தாம் நிரந்தர இடத்திற்கு செல்லவில்லை.
நாங்கள் தற்போது அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றோம். குறித்த இடப்பெயர்வின் போது நானும் எனது கணவரும் மூன்று பிள்ளைகளும் இடம் பெயர்ந்து சென்றோம். இதன் போது எனது கணவர் காணாமல் போயுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது குறித்த பகுதி, இராணுவத்தினரால் முழுமையாக கைப்பற்றப்பட்ட இடமாக காணப்பட்டது. அப்பகுதியூடாக சென்ற போது அவர் காணாமல் போயுள்ளார்.
இது தொடர்பில் பல தரப்பினரிடம் அறிவித்தும் எந்த முடிவும் கிடைக்கவில்லை.
எனக்கு மூன்று பெண் பிள்ளைகள். இவர்களுடைய கல்வி நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் கஷ்டமாக காணப்படுகின்றது. தகப்பன் இல்லாமையினால் பிள்ளைகளுடைய மனம் பாதிக்கப்பட்டுள்ளது.
கல்வியில் ஆரம்பத்தில் காட்டிய ஊக்கம் தற்போது இல்லை. எந்த நேரமும் சண்டை மற்றும் பிரச்சினைகள் என்ற மன நிலையில் பிள்ளைகள் காணப்படுகின்றனர். எனது கணவர் வந்து கொண்டிருந்த போது இடையில் வந்த பஸ் ஒன்றில் எங்களுடைய உடுப்பு பேக்குகளை கொடுத்துவிட்டார்.
ஆனால் அவர் வரவில்லை.இராணுவத்தினர் அரை மணி நேரத்திற்குள் எங்களை பாடசாலைக்கு கொண்டு சென்று விட்டார்கள். மாலை 6.30 மணிக்கு வந்தவர் 7 மணிவரை குறித்த இடத்திற்கு வரவில்லை. பின் பொலிஸாருக்கு அறிவித்தோம்.
அவர்கள் கூறினார்கள் விசாரித்து முடிந்ததும் பின்பு விட்டு விடுவார்கள் என்று. ஆனால் பிரதான வீதிகள் முழுவதும் இராணுவத்தினது கட்டுப்பாட்டிலே இருந்தது. எங்களையும் இராணுவமே கொண்டு வந்தனர். இதனால் எனது கணவரை இராணுவமே பிடித்திருக்கலாம் என அவரது மனைவி இமல்டா தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
September 11, 2011
Rating:

No comments:
Post a Comment