எரிகாயங்களுடன் பெண் மன்னார் ஆஸ்பத்திரியில்

மன்னார் அடம்பன் வைத்தியசாலை வீதியில் உள்ள அவரது வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகக் குறித்த பெண்ணின் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்டினார் என்று பெண்ணின் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பெண் அயலவர்களால் காப்பாற்றப்பட்டு அடம்பன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக எரியூட்டப்பட்ட பெண்ணின் தந்தை தனது மருமகனிடம் கேட்டபோது அவரும் அந்த நபரால் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். இந்தநிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த விடத்தல்தீவு பொலிஸார் குற்றஞ்சாட்டப்படும் நபரை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளன
எரிகாயங்களுடன் பெண் மன்னார் ஆஸ்பத்திரியில்
Reviewed by NEWMANNAR
on
September 12, 2011
Rating:

No comments:
Post a Comment