அண்மைய செய்திகள்

recent
-

தலை மன்னாரில் மீள்குடியேற முடியாத நிலையில் தமிழ், முஸ்ஸிம் மக்கள் (பட இணைப்பு) _

மன்னாரில் இடம்பெற்ற அசாதாரண சூழ் நிலையையடுத்து 1990 ஆம் ஆண்டு தலை மன்னாரில் இருந்து இடம் பெயர்ந்த 600 தமிழ், முஸ்ஸிம் குடும்பங்கள் மீண்டும் தலை மன்னாரில் மீள் குடியமர்வதில் பாரிய பிரச்சி னைகளை எதிர்நோக்கி வருகின்றன.





இடம்பெயர்ந்த நிலையில் வேறு மாவட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்ந்து வந்த அம்ம க்கள் மீண்டும் தமது செந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தலைமன்னார் பாடசாலை வீதியில் உள்ள தமது காணியை துப்புரவு செய்து வந்தனர்.

தலை மன்னார் பாடசாலை வீதியில் 600 தமிழ், முஸ்ஸிம் மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த சுமார் 130 ஏக்கர் நிலப்பரப்பை அம்மக்களே பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒற்றுமையாக துப்பரவு செய்து வந்தனர்.

ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணியினை அம்மக்கள் துப்பரவு செய்து கொண்டிருந்த போது தலை மன்னார் பொலிஸார் அம்மக்களை அந்த பகுதிக்குள் செல்லத் தடை விதித்ததோடு துப்பரவு செய்யும் வேலைத் திட்டத்தினையும் இடை நிறுத்தினர்.

இதனால் மக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. பின் குறித்த காணிப் பகுதியை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறித்த காணியை காணி சீர்திருத்த ஆணைக்குழு அபகரித்தமையினைத் தொடர்ந்தே அம்மக்களை அக்காணிகளில் குடியமர தடை விதிக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.

பல நாட்களாக தலை மன்னாரில் உள்ள உறவினர்களுடைய வீடுகளிலும், பள்ளிவாசலிலும், மர நிழலிலும் வாழ்ந்து வந்த அம்மக்கள் இனி நாம் எங்கு செல்வது என்ற நிலையில், தலைமன்னார் பியரில் உள்ள பள்ளிவாசலில் கடந்த 12 ஆம் திகதி அன்று மாலை தஞ்சமடைந்திருந்தனர்.

அப்போது அங்கு சென்று அந்த மக்களை அமைச்சர் றிஸாட் பதியூதின் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதன் போது மன்னார் பிரதேசச்செயலாளரும் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தலின் போது அரசாங்கத்திற்கு ஒட்டு மொத்த முஸ்ஸிம் மக்களாகிய நாங்களும் பூரண ஆதரவை வழங்கி வந்தோம். ஆனால், எங்களுடைய மீள்குடியேற்றத்தில் அரசாங்கம் பாரபட்சம் காட்டி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
தலை மன்னாரில் மீள்குடியேற முடியாத நிலையில் தமிழ், முஸ்ஸிம் மக்கள் (பட இணைப்பு) _ Reviewed by Admin on November 16, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.