தலைமன்னாரில் 130 ஏக்கர் காணியில் மீள்குடியேற எவருக்கும் அனுமதியில்லை பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்
தலைமன்னார் பியர் கிராமத்தில் பிரதான வீதியிலுள்ள 130 ஏக்கர் காணியில் எவருமே குடியிருக்க முடியாதெனவும் இக்காணி, காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கே சொந்தமானது எனவும் மன்னார் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மக்ஸி புறொக்டர் தெரிவித்துள்ளார்.
இக்காணியில் மக்களை மீளக்குடியேற தலைமன்னார் பொலிஸார் அனுமதி மறுத்ததுடன், அக்காணியிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் இவ்வாறு கூறினார்.
இக்காணிப் பிரச்சினை குறித்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.
பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் கூறுகையில்; இக்காணியில் குடியிருக்க 540 குடும்பங்கள் முகாமிட்டு துப்புரவு பணிகளில் ஈடுபட்டிருந்தன. காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு இக்காணி சொந்தமானது என ஆணைக்குழு அதிகாரிகள் தலைமன்னார் பொலிஸாரிடம் புகார் செய்திருந்தனர்.
இதன் அடிப்படையில்தான் கடந்த வாரம் பொலிஸõர் இக்காணியில் இருந்தவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்திருந்தனர். பொலிஸார் உரிய கடமையையே செய்துள்ளனர்.
மன்னார் பிரதேச செயலர் ஸ்ரான்லி டீ மெல், பள்ளிவாசல் தலைவர்கள், அதிகாரிகள், மீள்குடியேறிய மக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.
இக்காணிக்குள் இனிமேல் எவரும் உட்செல்லவோ, குடியிருக்கவோ அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
இதேவேளை, இக் காணிப்பிரச்சினை தொடர்பாக அந்த மக்கள் தெரிவிக்கையில்;
நாம் 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் இங்கு குடியிருந்தோம். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தோம். தற்போது எமது வீட்டு சுவர்கள், கோயில் சுவர்களே காணப்படுகின்றன. நாம் காணிக்குரிய உறுதிப்பத்திரங்களையும் வைத்திருக்கின்றோம்.
நாம் தற்போது உறவினர் வீடுகளிலும் மரங்கள், பள்ளிவாசலிலும் தங்கியுள்ளோம். நாம் இனிமேல் எங்கே போவது? இப்பிரச்சினைக்கு நீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றார் அவர்.
இந்த மக்களில் அதிகமானவர்கள் முஸ்லிம்களாவர். இவர்கள் புத்தளம் மற்றும் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து தற்போது வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
November 17, 2011
Rating:

No comments:
Post a Comment