சங்கு, கடலட்டை பிடிப்பதற்கு மன்னார் மீனவருக்கு அனுமதி
சங்கு மற்றும் கடலட்டை என்பவற்றை பிடிப்பதற்கு மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப் பணிப்பாளர் பி.எஸ். மெராண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
மன்னார் மாவட்டத்தில் கடலட்டை, சங்கு போன்றவற்றைப் பிடிப்பதற்கு உள்ளூர் மீனவர்களுக்குத் தடை விதித்த அதேவேளை வெளியாருக்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து மன்னார் மீனவர்கள் கடந்த வியாழக் கிழமை மன்னார் அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மீனவர்களின் குறித்த பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் ப.எஸ்.மெரான்டா, மேலதிக அரசாங்க அதிபர் திருமதி எஸ்.மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கடற்தொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு குறித்த பிரச்சினை தொடர்பாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 250 மீனவர்களுக்கு சங்கு, கடல் அட்டை பிடிப்பதற்கான அனுமதியை பணிப்பாளர் நாயகம் வழங்கியுள்ளார்.
சங்கு, கடலட்டை பிடிப்பதற்கு மன்னார் மீனவருக்கு அனுமதி
Reviewed by Admin
on
November 20, 2011
Rating:

No comments:
Post a Comment