அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் முறைக்கேடான முறையில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனம்!-செல்வம் எம்.பி


மன்னார் மாவட்ட விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனத்தில் பாரிய அநீதிகள் இடம்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளும், இளைளுர் யுவதிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.


 இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.மன்னார் மாவட்ட விவசாய ஆராட்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனம் தொடர்பில் இது வரை எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திடீர் என கொழும்பு கமநல திணைக்களத்தினால் 38   விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் எந்த அடிப்படையில் எவ்வாறு நியமனம் செய்யப்பட்டார்கள் என்பது குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் தெரிவு செய்யப்பட்ட இவர்களில் 37 முஸ்ஸிம்களும்,1 சிங்களவரும் அடங்குகின்றனர்.

குறித்த முஸ்ஸிம்கள் புத்தளம் மற்றும் முசலி பிரதேசங்களை கொண்டவர்கள். இவர்கள் அனைவரும் மன்னார் மூர் வீதியில் உள்ள கமநல சேவைகள் திணைக்களத்திற்கு நியமனத்தை பெற்றுக்கொள்ள நேற்று முன்தினம் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் மக்கள் வாழும் ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது. இந்த நிலையில் தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களையும், சிங்களவர்களையும் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ளமை சமூகங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்தும் விடயம் என பாராளுமன்ற உறுப்பினர்களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் நியமனங்கள் சட்டத்திற்கு எதிராகவும், மன்னார் மாவட்டத்தின் விகிதாசாரத்திற்கு மாறாகவும், தகுதி அடிப்படைக்கு எதிராகவும் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
வன்னி மாவட்டத்தில் தகுதியுடையவர்கள் பலர் இருக்கின்ற போதும் வேறு மாவட்டங்களில் இருந்து மன்னார் மாவட்டத்திற்கு பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
இச் செயற்பாட்டில் அரசியல் தலையீடு காணப்படுகின்றது. இவ் நியமனங்கள் அனைத்தும் ஒரு பக்கச்சார்பாக காணப்படுகின்றது. தேர்தல் காலங்களில் தமிழ், முஸ்லீம் என்ற வேறுபாடு காட்டாமல் வாக்கு கேட்கும் அமைச்சர்கள் தற்போது வேலைவாய்ப்புக்களில் தன்னிச்சையாக செயற்படுகின்றனர்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். குறித்த தன்னிச்சையான செயற்பாட்டிற்கு எதிராக பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருப்பதாகவும் மன்னாரில் உண்ணாவிரத்மொன்றை மேற்கொள்ளவிருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளதாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் முறைக்கேடான முறையில் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர்கள் நியமனம்!-செல்வம் எம்.பி Reviewed by NEWMANNAR on December 04, 2011 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.