மின்சார துண்டிப்பு: மன்னார் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் பணிப்பகிஷ்கரிப்பு _
மன்னார் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்று வியாழக்கிழமை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதால் பயணிகள் போக்குவரத்துக்களை மேற்கொள்ள முடியாத நிலையில் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மன்னார் தனியார் போக்குவரத்துச்சங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பை மன்னார் மின்சார சபை எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி துண்டித்தமையினாலேயே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பினை மன்னார் தனியார் பேருந்து சங்கம் மேற்கொண்டு வருவதாக பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் குறித்த மின் துண்டிப்பு தொடர்பாக, இலங்கை மின்சார சபையின் மன்னாருக்கு பொறுப்பான கிளிநொச்சி மாவட்ட பிரதான மின் பொறியியலாளர் எஸ்.பிரபாகரனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது.,
மன்னார் தனியார் போக்குவரத்துச் சங்கம் கடந்த நான்கு வருடங்களாக மின்சாரக் கட்டணங்களைச் செலுத்த வில்லை. தற்போது 44 ஆயிரம் ரூபா பணத்தை இது மன்னார் மின்சார சபைக்கு செலுத்த வேண்டியுள்ளது.
பல்வேறு அறிவித்தல்களின் பின்னரே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ___

Reviewed by NEWMANNAR
on
December 15, 2011
Rating:

No comments:
Post a Comment