சிதைகின்றது அல்லிராணிக் கோட்டை; மன்னாரில் கவனிப்பார் யாருமில்லை
இலங்கையில் பிரசித்தி பெற்ற அல்லிராணிக் கோட்டை மன்னார் மாவட்டம் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த அல்லிராணிக் கோட்டை அரிப்பு கடலுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் கூட இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பராமரிக்கப்படுவதில்லை.
கடந்த யுத்த காலத்தில் கூட இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பராமரிக்கப்படுவதில்லை.
கடந்த கால வரலாற்றைக் கூறும் ஞாபகச்சின்னங்கள் பல வடக்கில், அதிலும் மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்றன. ஆனால் அவை உரிய முறையில் பராமரிக்கப் படாமையால் அழிவடைந்து வருகின்றன. இந்த வகையில் இந்த அல்லிராணிக் கோட்டையும் கடலரிப்பின் காரணமாகத் தினமும் சிதைவடைந்து வருகின்றது. இந்தக் கோட்டை செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்குத் தென் பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பலர் வந்து செல்கின்றனர்.
ஆனால் கடலரிப்புக் காரணமாக இந்த அரிதான கோட்டை அழிவடைந்து வருவதால் சில ஆண்டுகளின் பின்னர் இதனைப் பார்வையிட முடியுமா என்ற ஐயமும் எழுந்துள்ளது. பண்டைக்கால வரலாற்றுச் சின்னங்களை நிர்மாணிப்பது என்பது இயலாத விடயமாகும்.ஆனால் இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க முடியும்.இந்த நிலையில் நிமிடத்துக்கு நிமிடம் கடலரிப்பினால் சிதைவடைந்து கொண்டு செல்லும் அல்லிராணிக் கோட்டையை அரசு பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மன்னாரில் வாழும் மக்களின் வேண்டுகோளாக உள்ளது.
சிதைகின்றது அல்லிராணிக் கோட்டை; மன்னாரில் கவனிப்பார் யாருமில்லை
Reviewed by Admin
on
December 25, 2011
Rating:
No comments:
Post a Comment