அண்மைய செய்திகள்

recent
-

சன்னார் கிராமத்தில் வெளியார் அத்துமீறிப் பிரவேசம் மக்கள் மத்தியில் பதற்றம், பெரும் களேபரம்

மன்னார் சன்னார் கிராமத்திற்குள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புத்தளத்திலிருந்து வாகனங்களில் வந்திறங்கிய 150 க்கும் மேற்பட்டோர் அப்பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்க முற்பட்டதுடன் அப்பகுதியில் பல்வேறு பாதைகளையும் அமைத்ததால் பெரும் கலவர நிலையேற்பட்டது. அங்கு வாழும் மக்களுக்கும் புத்த ளத்திலிருந்து அரசியல்வாதியொருவரால் அழைத்து வரப்பட்ட மக்களுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறவிருந்த நிலையில் நேற்று நண்பகல் அங்கு சென்ற மன்னார் மேலதிக அரச அதிபர் கடும் உத்தரவுகளைப் பிறப்பித்ததையடுத்து நிலை ஓரளவு சுமுக நிலைக்கு வந்துள்ளது. இது பற்றி மேலும் தெரியவருவதாவது; 



மன்னார்பூநகரி வீதியில் பள்ளமடு சந்தியிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தூரத்தில் பெரியமடு கிராமத்திற்கு அருகில், மன்னாரிலிருந்து சுமார் 32 கிலோ மீற்றர் தூரத்தில் மாந்தை மேற்கு பிரதேச சபை ப்பிரிவில் சன்னார் கிராமம் உள்ளது. இங்கு 147 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதுடன் விவசாயக் கூலிகளாகவுமுள்ள னர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஐந்து வாகனங்களில் புத் தளத்திலிருந்து 150 க்கும் மேற்பட்டோர் சன்னார் கிராமத்திற்குள் வந்திறங்கினர். இவர்களுக்கு அரசியல்வாதியொருவர் தலைமைதாங்கினார். ஏற்கனவே இந்தக் கிராம எல்லையில் புல்டோசர்கள் கொண்டுவந்து நிறுத்தப் பட்டிருந்த நிலையில் அங்கு வந்தவர்கள் அந்த புல்டோசர்கள் மூலம் பற்றை, செத் தைகளை வெட்டி அழித்து காணிகளைத் துப்புரவாக்கியதுடன் புதிய பாதைகளையும் குறுக்குப் பாதைகளையும் அமைத்தனர்.

 இவர்கள் தங்களுடன் நில அளவை யாளர்களையும் அழைத்து வந்திருந்ததுடன் அவர்களின் உதவியுடன், புத்தளத்திலிருந்து வந்தவர்களுக்கு அவசர அவசரமாக காணிகளும் பங்கிடப்பட்டன. திடீரென அங்கு வந்திறங்கியோரின் அத்துமீறல்கள் ஆக்கிரமிப்புகளால் அதிர்ந்து போன கிராம மக்கள் ஒன்று திரண்டு கேள்வி எழுப்பவே இரு தரப்புக்குமிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது. கிராமத்தவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததுடன் தாங்கள் ஆண்டாண்டு காலமாக வசிக்கும் பகுதியை அரசியல் பின்னணியுடன் ஆக்கிரமிக்க முயல்வதை அனுமதிக்கப் போவதில்லையெனக் கோஷமெழுப்பினர்.

இவ்வேளையில் அங்கு வந்த மாந்தை மேற்குப் பிரதேச செயலாளர் ஸ்ரீஸ்கந்தராஜாவும் புத்தளத்திலிருந்து வந்தவர்களுக்கு சார்பாகப் பேசியதுடன் அரசின் உயர்மட்ட உத்தரவிலேயே இவை நடப்பதாகவும் இதனைத் தடுத்து நிறுத்த முயலவேண்டாமெனவும் தடுத்து நிறுத்த முயல்வோருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்ததாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர். இதன்போது அக்கிராமத்திற்கு பெருமளவு படையினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்ததுடன் படையினர் தங்களை மிகக் கடுமையாக மிரட்டிய போது புத்தளத்திலிருந்து வந்தோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் பெண்களைக் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாகவும் பொலிஸார் ஓரளவு நியாயமாக நடந்துகொண்டதாகவும் கிராமவாசிகள் தெரிவித்தனர்.

மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவரது தலைமையில் வந்தவர்களே இவ்வாறு செயற்பட்டதாகவும் மாலைப்பொழுது மங்கி இருள் சூழ்ந்ததும் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாகவும் கிராமத்தவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் கிராமவாசிகள் நேற்றுக் காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடவிருந்த நிலையில் நேற்றுக் காலையும் புத்தளத்திலிருந்து வந்தோர் கிராமத்திற்குள் புகுந்ததால் சுமார் 50 கிராமவாசிகள் வன்னிமாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான எஸ்.விநோநோகராதலிங்கம், மன்னார் நகரசபைத் தலைவர், நகரசபை கூட்டமைப்பு உறுப்பினர்கள், மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களுடன் அரச அதிபரை சந்திக்க காத்திருந்தனர்.

அரச அதிபர் இல்லாததால் மேலதிக அரச அதிபர் திருமதி எஸ்.மோகநாதனிடம் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை குறித்தும் அரசியல் செல்வாக்கும் அரச அதிகாரிகளும் செல்வாக்கு தங்களுக்கு எதிராக இருப்பதால் தங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறும் நிம்மதியாக வாழ அனுமதிக்குமாறும் கோரியதுடன் மகஜரொன்றையும் கையளித்தனர். இதேநேரம் சன்னார் கிராமத்திற்குச் சென்ற அப்பகுதி கிராம சேவகர் சுமார் 40 குடும்பங்களுக்கு அவசர அவசரமாக விண்ணப்பப் படிவங்களைக் கையளித்து அவற்றை உடனடியாக நிரப்பித்தருமாறு அவசரப்படுத்தியதாகவும் அந்தப் படிவத்தில் தாங்கள் கிராமத்தை விட்டு வெளியேறுவதாக உடன்பாடு தெரிவிக்கிறோமென எழுதப்பட்டிருந்ததாகவும் எனினும் தாங்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் கிராமத்திலிருந்து அவ்வேளையில் அங்கு வந்தவர்கள் மேலதிக அரச அதிபரிடம் முறைப்பாடு செய்து இதில் உடனடியாக தலையிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கிராமவாசிகளுடன் சன்னார் சென்ற மேலதிக அரச அதிபர், அங்கு விசாரணைகளை நடத்திய பின் மறு அறிவித்தல் வரை அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு வெளியார் எவரும் கிராமத்துக்குள் பிரவேசிக்கக் கூடாதெனவும் உத்தரவிட்டுள்ளார். இதனால், தற்போது அங்கு சற்று அமைதி நிலவுகிறது. ஏற்கனவே இங்கு பொது மக்களால் கட்டப்பட்ட பிள்ளையார் கோவிலை அப்புறப்படுத்துமாறு பொலிஸார் கிராமத்தவர்களுக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் ஓரிரு தினங்களில் வெளியார் அந்தக் கிராமத்திற்குள் புகுந்தது குறிப்பிடத்தக்கது.
சன்னார் கிராமத்தில் வெளியார் அத்துமீறிப் பிரவேசம் மக்கள் மத்தியில் பதற்றம், பெரும் களேபரம் Reviewed by NEWMANNAR on January 24, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.