அண்மைய செய்திகள்

recent
-

இலக்கு வைக்கப்படும் சன்னார் கிராமம் !செல்வம் அடைக்கலநாதன் அவர்க

அடிப்படை வாழ்வாதார வசதிகள் ஏதுமற்று, தற்காலிய குடிசைகளில் வாழ்ந்து வரும் மன்னாரின் சன்னார் கிராம தமிழ் மக்களை வெளியேற்றுவதோடு, அக்கிரமாத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டபோதும், பதட்டான நிலை அங்கு காணப்படுவதாக அறியமுடிகின்றது.


கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிறிலங்கா அரசியல் பிரமுகர் ஒருவரின் தலைமையில், புத்தளத்திலிருந்து வாகனங்களில் வந்திறங்கிய 150 க்கும் மேற்பட்டோர், அப்பகுதி மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமிக்க முற்பட்டதுடன், காணிகளை வல்வளைப்புச் செய்ய முற்பட்டிருந்தனர்.

புல்டோசர்கள் மூலம் பற்றை, செத் தைகளை வெட்டி அழித்து காணிகளைத் துப்புரவாக்கியதுடன் புதிய பாதைகளையும் குறுக்குப் பாதைகளையும் அமைத்ததோடு, நில அளவை யாளர்களையும் அழைத்து புத்தளத்திலிருந்து வந்தவர்களுக்கு அவசர அவசரமாக காணிகளும் பங்கிடப்பட்டன.

அரச பிரமுகரால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையானது,
காலங்கலமாக வாழ்ந்து வந்த இப்பகுதி மக்களுக்கு கோபத்தை எற்படுத்தியதோடு முறுகல் தோன்றியிருந்தது.

தற்போது மேலதிக அரச அதிபர் கடும் உத்தரவுகளுக்கமைய, இவ்விவகாரம் ஓய்ந்துள்ள நிலையில், அப்பகுதியில் தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் பதட்டம் நீடிக்கின்றனது.

இது தொடர்பில் Tamil News Cicrcle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக கூட்டமைப்பு பிரதிநிதி செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்….
இலக்கு வைக்கப்படும் சன்னார் கிராமம் !செல்வம் அடைக்கலநாதன் அவர்க Reviewed by NEWMANNAR on January 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.