அண்மைய செய்திகள்

recent
-

டெங்கு ஒழிப்பில் மக்களும் களத்தில் !(பட இணைப்பு)


 டெங்கு காய்ச்சலும், மரணங்களும் மன்னார் மக்களின் அமைதியை அடிக்கடி பதம் பார்க்கின்றன ..
புகை அடிக்கும் இயந்திரங்களோடு சுகாதார திணைக்கள வாகனங்கள் பறந்து திரிவதும், புகைக்கருவிகளோடு முகமூடி மனிதர்கள் ( மருந்தடிப்பவர்கள்தான் ) நுளம்புகளை முற்றுகையிடுவதுமாக நகரம் புகைக்குள் திணறுகிறது.
          சுற்றிலும் கடல் சூழ்ந்துகொண்டுள்ள சிறு நிலப்பகுதிக்குள் ஏற்கனவே வற்றாத நிலையில் மழை வெள்ளங்கள் ! ; குடியிருப்புப் பகுதிகளை துண்டாடிக்கொண்டு சேறும், சகதியுமாக தேங்கியுள்ள தண்ணீர்களில் எந்நேரமும் போக்குவரத்து !! ;  இதோடு, வெயிலைக் கண்டுவிட்டு குளிர் காயவென வெளிக்கிளம்பிவிட்ட ஈக்கள் வேறு ....   போதாதா டெங்கு நுளம்புகளுக்கு ? 
          ஆனால் இம்முறை மக்கள் அவ்வளவு சுலபமாக நுளம்புகளிடம் ஏமாறுவதாக இல்லை. நகர சபைகளும், சுகாதார திணைக்களங்களும் ஒருபக்கம் டெங்கை வேட்டையாட , மறுபக்கத்தில் தாங்களும் தற்காப்பு முனைப்பில் இறங்கி விட்டார்கள் ! காய்ச்சல் வருவதற்குள் கையில் மண்வெட்டி, முள்விராண்டிகளோடு தமது வீதிகளை பாதுகாக்க ஆரம்பித்துவிட்டார்கள். 
          வீதியோரப் புதர்கள், கழிவு ஓடைகள் , குப்பைகள் என்று அகற்றி ,  டெங்கு ‘ ஹீரோக்களை ’ துவம்சம் செய்து வருகிறார்கள். பார்த்துக்கொண்டிருக்க படையினரும் தயாராக இல்லாததால் , அவர்களும் மக்களோடு வீதித் துப்பறவுக்கு கை கொடுக்கிறார்கள்.

-முத்து - 
டெங்கு ஒழிப்பில் மக்களும் களத்தில் !(பட இணைப்பு) Reviewed by Admin on January 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.