மடு, பாலம் பிட்டி கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு
மடு, பாலம் பிட்டி கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி வெடி பொருட்களை, மன்னார் புலனாய்வுத் துறையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.
முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வழங்கிய தகவலையடுத்து, நேற்று இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின் போதே இவ்வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, 60 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு- 14, 81 மில்லி மீற்றர் மோட்டார் குண்டு- 1, பியூஸ் இணைப்பு- 3, சார்ஜ்ஜர்- 3, ரி.என்.ரி. 60 மில்லி மீற்றர் குண்டு- 1 ஆகியவையே மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள வெடி பொருட்களை செயலிலக்க செய்வதற்காக இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
மடு, பாலம் பிட்டி கிராமத்திலுள்ள காட்டு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருட்கள் மீட்பு
Reviewed by Admin
on
January 07, 2012
Rating:

No comments:
Post a Comment