மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் வீட்டினுள் இனந்தெரியாதோர் தாக்குதல்
மன்னார் பிரதேச சபையின் உப தலைவரினது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக மன்னார் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின்போது, இருவர் காமயடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதேச சபையின் உப தலைவரது மனைவி மற்றும் பிள்ளைகளே இத்தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் வீட்டினுள் இனந்தெரியாதோர் தாக்குதல்
Reviewed by NEWMANNAR
on
February 11, 2012
Rating:
No comments:
Post a Comment