அண்மைய செய்திகள்

recent
-

எள்ளுப்பிட்டி கிராமத்தில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லையென மீள்குடியேறிய மக்கள் விசனம்


மன்னார் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இது வரை எவ்வித உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் தாம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதாகவும்; அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


கடந்த 2010 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் குறித்த கிராமத்தினைச் சேர்ந்த 120 குடும்பங்கள் மீண்டும் எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

இதன்போது வாழ்வுதயம் அமைப்பானது தற்காலிக கூடாரங்களை வழங்கியதோடு ஏனைய தன்னார்வத் தொண்டு அமைப்புக்கள் அம்மக்களுக்கான அவசர உதவிகளை வழங்கி இருந்தன.

இதனைத் தொடர்ந்து மீள் குடியேறிய காலத்தில் இருந்து 6 மாதங்களுக்காண உலர் உணவுகளும் வழங்கப்பட்டது. இதன் பின்பு எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்திற்கு அருகில் உள்ள இராணுவத்தினர் அம்மக்களுக்காண அவசர உதவிகளை செய்து கொடுத்ததோடு காடுகளை துப்பரவு செய்து தற்காலிக கூடாரங்களை அமைப்பதற்கான உதவிகளையும் செய்து கொடுத்தனர்.

தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டு 15 மாதங்களைக்கடக்கின்ற போதும் மாந்தை எள்ளுப்பிட்டி கிராம மக்களுக்கு   இதுவறை வீட்டு திட்டம் உற்பட எவ்வித அபிவிருத்தித்திட்டங்களையும் தமது கிராமத்தில் முன்னெடுக்கவில்லை என அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

'எள்ளுப்பிட்டி கிராமத்திற்கு பிறகு மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பல கிராமங்களுக்கு அரசாங்கம் வீட்டுத்திட்டம், குடி நீர் திட்டம், மின்சாரம் உற்பட பல்வேறு திட்டங்களை அமுல் படுத்தியுள்ளது.

ஆனால் எமது கிராமத்தில் எவ்வித திட்டமும் அமுல் படுத்தவில்லை.

தற்போது 120 குடும்பங்கள் வாழ்ந்து வரும் எமது கிராமம் அடர்ந்த காடுகளாக காணப்படுகின்றது.
இதனால் அதிகலவான விசப்பாம்புகளும் காணப்படுகின்றன. எமது கிராமத்திற்கு பொருப்பான அதிகாரிகளின் அலட்சியப்போக்கின் காரணத்தினாலேயே எமது கிராமத்திற்கு இது வரை எந்த விதமான அபிவிருத்திப்பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை' என அம்மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எள்ளுப்பிட்டி கிராமத்தில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படவில்லையென மீள்குடியேறிய மக்கள் விசனம் Reviewed by Admin on February 11, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.