அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் கணக்கில் உள்ள பணம் மோசடி

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் கணக்கில் உள்ள பணத்தில் 86,652 ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் செ.செல்வமணி தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
'மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் தலைவர் ஆகிய எனது அனுமதியின்றி கடந்த 27௧2௨011 காலை 409651 எனும் இலக்கம் கொண்ட 86,652 ரூபா பெறுமதியான காசோலை எஸ்.பெனடிக்ற் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த காசோலை கடந்த 03-01௨012 அன்று மக்கள் வங்கியின் மன்னார் கிளையில் மாற்றப்பட்டு பணம் பெறப்பட்டுள்ளது. எமது சங்கத்தின் சட்ட விதிகளுக்கு அமைவாக தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூவரும் காசோலையில் கையொப்பமிடல் வேண்டும். இவர்களில் யாரேனும் ஒருவர் இல்லாது விட்டால் உப தலைவர் கையொப்பம் இட அனுமதியுண்டு.

ஆனால் மேற்குறிப்பிட்ட காசோலை, தலைவராகிய நான் இருந்தும் உப தலைவர் ஜ.யோகநாதன் என்பவர் தலைவர், செயலாளர் ஆகிய இருவருக்கும் உரிய இடத்தில் காசோலையில் கையொப்பமிட்டுள்ளார்.  பின் கடந்த 03௧௨012ஆம் திகதி மன்னார் மக்கள் வங்கியில் குறித்த காசோலை மாற்றம் செய்யப்பட்டு பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் வங்கி முகாமையாளருக்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

குறித்த காசோலையில் இரண்டு கையொப்பங்களும் ஒரே மாதிரி போடப்பட்டுள்ளமையினால் குறித்த காசோலையினை வங்கி ஏற்றுக்கொண்டுள்ள விதம் தமக்கும் தமது தங்கத்திற்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் தலைவர் செ.) செல்வமணி தெரிவித்தார்
(எஸ்.ஜெனி

மன்னார் மாவட்ட சுகசேவை பணியாளர் கூட்டுறவு கடனுதவி சிக்கன சேமிப்பு சங்கத்தின் கணக்கில் உள்ள பணம் மோசடி Reviewed by NEWMANNAR on February 03, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.