மன்னார் வைத்தியசாலை வளாகத்தினுள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வளாகத்தினுள் காணப்படும் கட்டாக்காலி நாய்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதினால் நோயாளர்கள் மற்றும் அவர்களை பார்வையிட வரும் உறவினர்கள் உட்பட அனைவரும் தொடர்ந்தும் பாதிப்படைந்து வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தினுள் குறித்த கட்டாக்காலி தெரு நாய்கள் பல்கிப் பெருகி வாழ்ந்து வருகின்றன. அங்கு சுமார் 30 இற்கும் அதிகமான கட்டாக்காலி தெரு நாய்கள் காணப்படுகின்றன.
குறித்த நாய்கள் வைத்தியாலையில் உள்ள நோயளர் விடுதி உட்பட சகல பகுதிகளிலும் அதிகளவாக நடமாடித்திரிகின்றன. குறித்த நாய்கள் நோயாளர்களை பார்வையிட வருபவர்களை கடிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் குறித்த கட்டாக்காலி தெரு நாய்களை வைத்தியசாலை வளாகத்தினுள் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தினுள் குறித்த கட்டாக்காலி தெரு நாய்கள் பல்கிப் பெருகி வாழ்ந்து வருகின்றன. அங்கு சுமார் 30 இற்கும் அதிகமான கட்டாக்காலி தெரு நாய்கள் காணப்படுகின்றன.
குறித்த நாய்கள் வைத்தியாலையில் உள்ள நோயளர் விடுதி உட்பட சகல பகுதிகளிலும் அதிகளவாக நடமாடித்திரிகின்றன. குறித்த நாய்கள் நோயாளர்களை பார்வையிட வருபவர்களை கடிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் குறித்த கட்டாக்காலி தெரு நாய்களை வைத்தியசாலை வளாகத்தினுள் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னார் வைத்தியசாலை வளாகத்தினுள் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரிப்பு
Reviewed by Admin
on
February 03, 2012
Rating:

No comments:
Post a Comment