அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்குசத்துணவுப் பொதிகள்


மன்னார் மாவட்டத்தில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்கு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்று வியாழக்கிழமை காலை சத்துணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

மன்னார் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கணவனை இழந்து, குடும்பத்தை பராமரித்து வரும் 40 பெண்களுக்கே மேற்படி பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 9 மணியளவில் மன்னார் திருமறைக்காலாமன்றத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.


இதன்போது தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் வட கிழக்கு மாவட்டங்களுக்கான இணைப்பாளர் ஏ.ஜேசுதாசன், தேசிய மீனவர் ஒத்துளைப்பு பேரவையின் பெண்கள் திட்ட இணைப்பாளர் லவன்யா, தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட ஆலோசகர் ஏ.டியூக், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட பிரதிநிதி அ.சுனேஸ் சோசை ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னாரில் கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்குசத்துணவுப் பொதிகள் Reviewed by Admin on February 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.