அண்மைய செய்திகள்

recent
-

சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குற்றச்சாட்டில் கைதான 4 பெண்களும் விடுதலை

மகாசிவராத்திரி தினத்தன்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில்  கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பெண்களும் விசாரணையின் பின் மன்னார் மாவட்ட மேலதிக நீதவானினால் விடுவிக்கப்பட்டுள்ளனர். 


மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்ட இந்த 4 பெண்களிடமும் விசாரணை மேற்கொண்ட மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் ஏ.யூட்சன், அவர்களை விடுதலை செய்தார். 

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு சிவராத்திரி விரத பூஜை வழிபாடுகள் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் இந்த 4 பெண்களும் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 
மன்னார் குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 

இந்த 4 பெண்களும் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமாக நடமாடிய குற்றச்சாட்டில் கைதான 4 பெண்களும் விடுதலை Reviewed by Admin on February 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.