எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கைவிடக்கோரி மன்னார் மாவட்ட மீனவர் சமாஜம் மௌன ஊர்வலம்

காலை 9 மணியளவில் சமாசக் கட்டடத்தின் வாயிலிலிருந்து தொடங்கி மன்னார் அரசாங்க அதிபர் அலுவலகம் வரை மௌன ஊர்வலமாகச் சென்று அரசாங்க அதிபரிடம் மகஜரைக் கையளித்தனர்.
ஜனாதிபதிக்கு முகவரியிடப்பட்ட அந்த மகஜரில் மீனவரின் வாழ்க்கையை மட்டுமன்றி சாதாரண மக்களையும் பாதிக்கும் எரிபொருள் விலையேற்றத்தை உடனடியாகக் கைவிடுமாறும், தற்பொழுது மன்னாரில் மட்டும் அமுலில் இருக்கின்ற பாஸ் முறையை இரத்து செய்யும் படியும், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை தடுத்துநிறுத்துமாறும் கோரப்பட்டிருந்தது.
எரிபொருள் உள்ளிட்ட விலையேற்றங்களுக்கு எதிராக மக்களால் முன்னெடுக்கப்படும் சகல போராட்டங்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்கும் என்ற கொள்கை முடிவையடுத்தே இன்று மீனவ சமாசத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஊர்வலத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோநோகராதலிங்கம் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான வீ.ஆனந்தசங்கரி அவர்களும் கலந்துகொண்டனர்.
ஊர்வலத்தின் முடிவில் மன்னார் அரசாங்க அதிபரிடம் மீனவ சமாஜத் தலைவர் முகமட் ஆலம் மகஜரைக் கையளித்தார்.
மகஜரைக் கையளித்தபின் அரசாங்க அதிபரிடம் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஆனந்தசங்கரிஇ இவர்களுடன் அருட்தந்தையர் மற்றும் அருட்சகோதரர்கள் மீனவர்களுக்கான பாஸ் நடைமுறையை முற்றாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கும்படியும்இ மாவட்டத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும்படியும் கேட்டுக்கொண்டனர்.
ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்திற்கு மன்னார் மாவட்ட வர்த்தக சங்கத்தினரும் கடைகளை அடைத்து மீனவ சமாஜனத்தினருக்கு ஆதரவளித்தனர்.
எரிபொருட்களின் விலை ஏற்றத்தைக் கைவிடக்கோரி மன்னார் மாவட்ட மீனவர் சமாஜம் மௌன ஊர்வலம்
Reviewed by NEWMANNAR
on
February 15, 2012
Rating:

No comments:
Post a Comment