ஆண்டாங்குள நாகபூசனி அம்மன் ஆலயம் இல்லாமல் போகும் சாத்தியம்
மன்னார் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் கிராமத்தில் அமைந்திருந்த சிறிய நாகபூசனி அம்மன் ஆலயம் அடியோடு இல்லாமல் போகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு அக்கிராம மக்கள் கொண்டு வந்துள்ளனர்.
ஆண்டாங்குளம் கிராமத்தில் 1986ஆம் ஆண்டு முதல் தகரத்தினால் அமைக்கப்பட்ட நிலையில் சிறிய நாகபூசனி அம்மன் ஆலயம் காணப்பட்டது. இவ் ஆலயம் ஷெல் வீச்சு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில் இவ் ஆலயம் 2010ஆம் ஆண்டு அக்கிராம மக்களினால் புனரமைக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இவ் ஆலயம் பலவந்தமாக அகற்றப்பட்டுள்ளது. இதனால் இவ் ஆலயம் அடியோடு இல்லாது போகக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஆண்டாங்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் பழமை வாய்ந்த இவ் ஆலயம் இல்லாமை மக்கள் மத்தியில் கவலையை உண்டுபண்ணியுள்ளதாக அம்மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் தெரிவித்துள்ளனர்.

Reviewed by Admin
on
February 19, 2012
Rating:

No comments:
Post a Comment