அண்மைய செய்திகள்

recent
-

மாதா தரிசனம் என்று பொய்ப் பிரசாரம் மூலம் மன்னாரில் பணம் வசூலிப்பு!

மன்னார் மாவட்டம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தென்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் சென்று தனக்கு மாதா தரிசனம் தினமும் தருகின்றார், தனது இல்லத்தில் மாதா தங்கி இருக்கின்றார் என்று கூறி, பணம் வசூலித்து வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,



மயூரா கோட், சிற்றாலய ஒழுங்கை, கொழுத்பு-06 எனும் முகரியைச் சேர்ந்த பெண் ஒருவர், மன்னார் மாவட்டம் உட்பட நாட்டில் உள்ள பல பாகங்களுக்கும் சென்று தனக்கு மாதா தரிசனம் தினமும் தருகின்றார். தனது இல்லத்தில் மாதா தங்கி இருக்கின்றார் என பொய்யான கருத்துக்களை கூறி, அதற்கு சார்பாக போலியான புகைப்படங்களையும் காட்டி, மக்களிடமிருந்து அதிகளவான பணம் வசூலிப்பு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பணம் வசூலித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இவர் ஒரு திருமண தரகர் என்றும் அறிமுகம் செய்து ஒரு குடும்பத்து பிரச்சினையை வேறு குடும்பங்களுக்கு தெரியப்படுத்தி, பலரின் திருமணங்களை தடுத்தும், குடும்பங்களுக்கிடையில் பிரிவினைகளை ஏற்படுத்தி மக்களை தன்வசப்படுத்தியும் வருகின்றார்.

தற்போது குறித்த பெண் தனது போலி சித்து விளையாட்டக்களை மீள் குடியேற்ற மக்கள் மத்தியிலும் காட்டி வருகின்றார். குறித்த பெண்ணின் செயற்பாடு கத்தோலிக்க திருச்சபைக்கு சீர் கேட்டை விளைவித்து வருவதாக சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்ட மக்களும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணிண் செயற்பாடுகள் தொடர்பில் பங்கு குருக்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், போலி செயற்பாட்டின் மூலம் எவரையும் ஏமாந்து விட வேண்டாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
மாதா தரிசனம் என்று பொய்ப் பிரசாரம் மூலம் மன்னாரில் பணம் வசூலிப்பு! Reviewed by Admin on March 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.