அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரேரணை நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறது


ஜெனீவா மனித உரிமை கூட்டத்தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக அறிவித்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ் விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
இப்பிரேரணையானது இன வேறுபாடின்றி இலங்கையர் அனைவருக்கும் நன்மையளிக்குமென நாம் நம்புகிறோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பானது மனித உரிமை கூட்டத்தொடரின் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின் நிறைவேற்றத்தினை தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான முதற்கட்ட படியாக கருதுகிறது.
19ஆவது மனித உரிமை கூட்டத்தொடரின் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணையின் நிறைவேற்றமானது தமிழ் மக்கள் நேச நாடுகளுடன் நெருங்கிய தொடர்பை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
இப்பிரேரணையானது நிறைவேற்றப்படுவதை உறுதிசெய்யும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக இப் பிரேரணையோடு தொடர்புபட்டிருந்த நாடுகளுடன் கூட்டத்தொடருக்கு முன்னரும் கூட்டத்தொடரின் போதும் பல்வேறு தொடர்பாடல்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தியிருந்தது.
இந்தப் பிரேரணையை நிறைவேற்றுகின்ற தருணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பொறுப்புடனும் இராஐதந்திர தீர்க்கதரிசனத்துடனும் செயற்பபட்டதென்பது இப்பொழுது எமது மக்களுக்கு தெளிவாகியிருக்குமென்று நாம் நம்புகிறோம். என கூட்டமைப்பினால் வெளியிடப்படுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரேரணை நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறது Reviewed by Admin on March 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.