தாழ்வுபாடு பகுதியில் வாகன விபத்தில் இருவர் பலி
மன்னார், தாழ்வுபாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மன்னார், தாராபுரத்தை சேர்ந்த சாதாரன தரத்தில் கல்வி பயிலும் 18 வயது மாணவரான முஹம்மது பர்ஸான் மற்றும் புத்தளம், தில்லையடி அல் - ஹாசிமி சிட்டியை சேர்ந்த 25 வயதான எம்.ஏ.எம்.அர்சத் ஆகிய இருவருமே குறித்த விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
தலைக்கவசம் அணியாது மன்னார் தாழ்வுபாடு பகுதியை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த போது, வீதியோரத்தில் காணப்பட்ட மரமொன்றில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரினதும் சடலங்களும் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Reviewed by Admin
on
April 02, 2012
Rating:

No comments:
Post a Comment