அண்மைய செய்திகள்

recent
-

வாழும்போதே வாழ்த்துகின்ற பண்பு நம்மில் வளர வேண்டும்-தமிழ் நேசன் அடிகளார்

நம் மத்தியில் சாதனை புரியும் திறமைசாலிகளை, ஆற்றல் வாய்ந்தவர்களை நாம் வாழ்த்தவும் பாராட்டவும் காலம் தாழ்த்தக்கூடாது. ஒருவர் இறந்த பின்னர்தான் அவரின் சிறப்புக்களை சொல்லிப் பாராட்டுகின்ற நமது வழக்கம் - நமது பழக்கம் மாற வேண்டும். சாதனையாளர்கள் மற்றும் திறமைசாலிகளை அவர்கள் வாழும்போதே நாம்; வாழ்த்த வேண்டும்
என மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், 'மன்னா' பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.

  அண்மையில் (08.04.2012) நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சூரியகட்டைக்காடு என்னும் கிராமத்தில் இடம்பெற்ற மறைக்கல்வி பற்றிய இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின்போது அக்கிராமத்தைச் சேர்ந்த கலாபூசணம் விருது பெற்ற திரு. செபமாலை அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்து உரையாற்றம்போதே அடிகளார் இவ்வாறு குறிப்பிட்டார்.
  தமிழ் நேசன் அடிகளார் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது, சாதாரணமாக ஒருவரை நாம் வாழ்த்தும்போது அவர் வளர்கின்றார் என்பது அடிப்படையான ஓர் உளவியல் உண்மையாகும். இதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. வாழ்த்துக்குரியவர்களை வாழ்த்துவதாலோ அல்லது பாராட்டுவதாலோ நாம் எதையும் இழந்துவிடுவதிலை. ஆனால் வாழ்த்தப்படுபவர்கள் அடையும் மகிழ்ச்சி, மலர்ச்சி, வளர்;ச்சி அளவிட முடியாதது. எனவே ஒருவர்  இறந்தபின்னர் அல்ல அவர் வாழும்போதே அவரை வாழ்த்துவோம்.


நானாட்டான் பிரதேசத்தில் உள்ள சூரியகட்டைக்காடு என்னும் கிராமத்தில் இடம்பெற்ற மறைக்கல்வி பற்றிய இறுவட்டு வெளியீட்டு நிகழ்வின்போது சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், 'மன்னா' பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் தமிழ்ச் சங்கத் தலைவருமான அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் மங்கள விளக்கேற்றுகின்றார்.

தமிழ் நேசன் அடிகளார் கலாபூசணம் விருது பெற்ற திரு. செபமாலை அவர்களுக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கின்றார்.

தமிழ் நேசன் அடிகளார்; நிகழ்வில் உரையாற்கின்றார்.
வாழும்போதே வாழ்த்துகின்ற பண்பு நம்மில் வளர வேண்டும்-தமிழ் நேசன் அடிகளார் Reviewed by Admin on April 23, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.