தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு

இந்தக் காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்தப் பனை மரத்தின் மூலம் அம்மக்கள் தமது வருமானத்தை தேடிக்கொள்ளுகின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணிகளுக்குள் செல்லுவோர் பொலிஸாரின் உதவியுடன் பனை மரங்களை வெட்டிச் செல்லுகின்றனர்.
திருடப்படும் பனை மரங்களை சீவி அதிகூடிய விலைக்கு விற்கின்றனர். இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் பொலிஸாருக்கு இலஞ்சப்பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தலைமன்னார் பொலிஸில் முறையிட்ட போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சட்ட விரோதமான செயற்பாடுகளை தடுக்க வேண்டிய பொலிஸாரே இந்த சட்டவிரோத செயற்பாடுகளுக்கு உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 19, 2012
Rating:

No comments:
Post a Comment