தமிழ் மக்கள் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது கூட்டமைப்பின் ஒற்றுமையும்,பலமும் குறைவடையாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.-கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ

இலங்கை அரசாங்கத்தைப்போல் இந்திய அரசும் கூட்டமைப்பை பிளவு படுத்த முயற்சிக்கின்றதா என்ற கேள்வியும் எமது மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. -
இது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தவறா? ஆல்லது இந்திய அரசின் சதியா? என விளங்கிக்கொள்ள முடியவில்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இந்திய பாராளுமன்ற குழுவுக்கும்,தமிழ் கட்சிகளின் பிரதி நிதிகளுக்குமிடையில் நடை பெற்ற சந்திப்பு தொடர்பாக மன்னார் ஊடகவியலாளர்கள் அவரிடம் இது தொடர்பில் கேட்ட போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...
தமிழ் மக்கள் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது அல்லது சந்திப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்ற போது கூட்டமைப்பின் ஒற்றுமையும்,பலமும் குறைவடையாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.
கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு எடுக்கின்ற தீர்மானங்கள் 5 கட்சிகள் கொண்ட கூட்மைப்பின் தலைமையில் அங்கீகாரத்துடனேயே செயற்படுத்தப்பட வேண்டும்.
கூட்டமைப்பில் சிலர் தொடர்ந்து தவறு விட்டுக்கொண்டிருப்பதை நாம் கை கட்டி தொடர்ந்தும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் மேலும் தெரிவித்தார்
தமிழ் மக்கள் சார்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்ற போது கூட்டமைப்பின் ஒற்றுமையும்,பலமும் குறைவடையாது பார்த்துக்கொள்ளப்பட வேண்டும்.-கூட்டமைப்பின் வன்னி எம்.பி எஸ்.வினோ
Reviewed by NEWMANNAR
on
April 19, 2012
Rating:

No comments:
Post a Comment