மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் சி.ஐ.டி விசாரணை!?

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆயர் இல்லத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு அதிகாரிகள் ஆயரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஜெனீவாவில் இலங்கை விவகாரம் சூடுபிடித்திருந்த சந்தர்ப்பத்தில் வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் குறித்து ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக ஆயர் இல்லத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் தரவுகளுக்கமைய 2008-09 ஆம் ஆண்டுகளில் 146,679 பேர் காணாமல் போயுள்ளதாக ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் தகவல் வெளியிட்டிருந்தார். இது குறித்தும் ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருமாறு ஆயர் அழைக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தகவல்களை ஆயர் இல்லம் உறுதிப்படுத்த மறுத்துவிட்டது.
செய்தி மூலம் தமிழ்வின்
ஈழத் தமிழர் நிலைமை பற்றி எடுத்தியம்பிய ஆயர் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் கடுமையான விசாரணை!
ஈழத் தமிழர் நிலைமை பற்றி எடுத்தியம்பிய ஆயர் மீது சி.ஐ.டி.அதிகாரிகள் கடுமையான விசாரணை!
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் சி.ஐ.டி விசாரணை!?
Reviewed by NEWMANNAR
on
May 11, 2012
Rating:

No comments:
Post a Comment